Pages

Friday, March 4, 2022

கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பால் மரணமடைந்தார்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் தாய்லாந்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 52.

முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் வீரரான ஷேன் வார்னே, 1992 முதல் 2007 வரையில் 145 டெஸ்ட் போட்டிகளிலும், 194 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர். ஒரு நாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வார்னே, நூற்றாண்டின் ஆகச் சிறந்த கிரிக்கெட்டர்கள் பட்டியலில் முதன்மை வகிப்பவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்கார்ட் இதெல்லாம் பிரியா தருவாங்களா??? இதுவரைக்கு நமக்கு தெரியாம போயிடுச்சு


நாம எல்லாரும் பிலிப்கார்ட் எதுக்கு யூஸ் பண்றோம்னா நமக்கு ஏதாவது ஒரு பொருள் தேவைப்படுகிறது ஆன்லைனில் ஆர்டர் பண்ணிட்டு இருக்க மட்டும் தான் யூஸ் பண்ணிட்டு இருக்கோம். ஆனால் இதையும் தாண்டி ஃபிலிப்கார்ட் நமக்கு நிறைய புதுப்புது ஆஃபர் கொடுக்கிறார்கள். அதெல்லாம் என்னன்னு இப்போ பாக்கலாம்.


 முதல்ல flipkart coins:

                           ஒவ்வொரு பொருள் நம்ம ஆன்லைனில் ஆர்டர் பண்ணும் போதும் பிளிப்கார்ட் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் நாலு coins இலவசமாக கொடுப்பாங்க. அப்படி நமது சேர்க்கிற காயின் மூலமா Disney hotstar அல்லது zee5 போன்ற செயலிகளில் ஒரு வருடத்திற்கான subscription பெறலாம்.

Wednesday, March 2, 2022

NATO நாடுகள் ரஷ்யவிடம் இருந்து பாதுகாக்கப்படும். அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘அமெரிக்கா மற்றும் எங்களுடைய கூட்டாளி நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன், எங்களுடைய ஒன்று சேர்ந்த பலத்தால் பாதுகாப்போம்.

உக்ரைன் மக்கள் தைரியத்துடன் சண்டையிட்டு வருகிறார்கள். சண்டையில் புதின் ஆதாயம் அடையலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு அவர் அதற்கான அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். உக்ரைன் மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது’’ என்றார்.

முன்னதாக, சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காதபோது அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ளோம். அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு, அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுகின்றனர். புதினின் போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்படாதது. ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை புதின் நிராகரித்துவிட்டார். 

மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின் நினைத்துவிட்டார். புதின் தவறாக நினைத்துவிட்டார்’’ எனத் தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பால் மரணமடைந்தார்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் தாய்லாந்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வ...